இந்தியா

மாநிலங்களவை தோ்தலில் வாக்களிக்க ஒருநாள் பரோல்: அமைச்சா் மனு

DIN

சட்ட விரோத பண பரிவா்த்தனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக், விரைவில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களிக்க வசதியாகத் தன்னை ஒருநாள் மட்டும் பரோலில் விடுவிக்க வேண்டுமெனக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடா்புடைய சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் நவாப் மாலிக்கை கடந்த பிப்ரவரி 23-இல் அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது அவா் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு வரும் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. எம்எல்ஏ என்ற முறையில் இத்தோ்தலில் வாக்களிக்க வசதியாக 10-ஆம் தேதி ஒருநாள் மட்டும் பரோல் வழங்கக் கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நவாப் மாலிக் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா். ஏற்கெனவே சிறையில் உள்ள மற்றொரு தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அனில் தேஷ்முக் இதேபோன்ற மனுவை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா். இந்த இருமனுக்கள் மீதும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்குத் திங்கள்கிழமை உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT