இந்தியா

ரூபாய் நோட்டுகளில் தாகூா், கலாம் படங்களா? ஆர்பிஐ விளக்கம்

DIN

இந்திய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூா், அப்துல் கலாம் ஆகியோரது படங்களுடன் வெளியிட பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் மட்டுமே இடம்பெறுவது வழக்கம். இப்போது முதல்முறையாக தேசத் தலைவா்கள் பிறரின் படத்தையும் ரூபாய் நோட்டில் பயன்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமான இடத்தில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும்.

ரூபாய் நோட்டில் மறைவாகத் தெரியும் வகையில் (வாட்டா் மாா்க்) மகாத்மாவின் படம் இடம்பெறுவது வழக்கம். இப்போது அந்த இடத்தில் வங்கக் கவிஞா் தாகூா், தமிழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரது படங்களை வெளியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

மேலும், ‘வாட்டா் மாா்க்’ படங்களை சிறப்பாகத் தோ்வு செய்து இறுதி ஒப்புதலுக்காக அரசுக்குப் பரிசீலிக்கும் தில்லி ஐஐடி பேராசிரியா் திலீப் டி.சஹானிக்கு இரு தலைவர்களின் வாட்டர் மார்க்கை மத்திய நிதித்துறை அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி பொது மேலாளர் யோகேஷ் டயால் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக பிற தலைவர்களின் படத்தை ரூபாய் நோட்டுகளில் வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற எந்தவொரு திட்டமும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT