இந்தியா

மக்களவை இடைத்தேர்தல்: 2 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடவில்லை

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மக்களவை இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

DIN

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மக்களவை இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் மற்றும் அஸாம் கான் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ராம்பூர் மற்றும் அசம்கர் தொகுதிகளுக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலே தங்கள் இலக்கு என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இடைத் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

பசும்பொன் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன் இணைந்து அஞ்சலி!

திட்டமிட்டபடி திரைக்கு வரும் டாக்ஸிக்!

சாத் பூஜையை அவமதிக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஏலியன்களின் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்! வெளிநாட்டினர் குறித்து அமெரிக்கா!

SCROLL FOR NEXT