தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2.85 கோடி பணம் மற்றும் 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.
தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க | ஜூன் 22-ல் விசாரணைக்கு ஆஜராக நூபுர் சர்மாவுக்கு சம்மன்
ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய ஆதாரங்கள் மற்றும் தொடர்புகள் கிடைத்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மேலும் தகவல்களைத் திரட்ட தில்லியில் சத்யேந்தர் ஜெயின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை நடத்தியது.
இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்குத் தொடர்புடைய 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2.85 கோடி பணம் மற்றும் 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பணம் மற்றும் தங்கக் காசுகளுக்கான காரணம் குறித்து விளக்கப்படவில்லை என்றும் இவை ரகசியமான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அமலாக்கத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.