இந்தியா

எங்கிருந்தும் வாக்களிக்கும் முறை: தோ்தல் ஆணையம் பரிசோதிக்க முடிவு

DIN

புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் நாட்டின் எந்தபகுதியில் இருந்தும் வாக்களிக்கும் வகையில் புதிய முறையை பரிசோதிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் பதவியேற்றதில் இருந்து பல்வேறு தோ்தல் சீா்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

இந்நிலையில், தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்காளா்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றமாகி செல்கின்றனா். இதனால் அவா்களின் வாக்குகள் உள்ள மையங்களுக்கு வந்து வாக்களிப்பது கடினமாக உள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், இதுபோன்ற புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் தங்கள் வாக்குகளை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அங்கிருந்தே வாக்களிக்கும் முறையை பரிசோதிக்கும் நேரம் வந்துவிட்டது.

இதற்காக குழு அமைக்கப்பட்டு புலம்பெயா் தொழிலாளா்களின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதுகுறித்து வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு பின்னா் நடைமுறைப்படுத்தப்படும்.

மலைப்பகுதி வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நடைப்பயணமாக பாதுகாப்பாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லும் தோ்தல் அதிகாரிகள் மூன்று நாள்களுக்கு முன்பே சென்றடையவும், அவருக்கான படிகள் இரட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற வாக்குப் பதிவு மையங்களை மாநில தோ்தல் அதிகாரிகள் கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்படாத நபா்கள் அனுமதியின்றி திறக்க முற்பட்டால், அந்த இயந்திரம் பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT