சபரிமலை 
இந்தியா

ஆனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் ஜூன் 14-ம் தேதி திறப்பு

கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில்  ஆனி மாத பூஜைக்காக  கோயில் நடை வருகிற ஜூன் 14-ஆம் தேதி  திறக்கப்பட உள்ளது.

DIN

கேரளம்: கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில்  ஆனி மாத பூஜைக்காக  கோயில் நடை வருகிற ஜூன் 14-ஆம் தேதி  திறக்கப்பட உள்ளது.

இதனிடையே, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

வழக்கம் போல் இணையதள முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT