இந்தியா

இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமணம் நடத்தத் தடை

DIN

இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. 

இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷாரீப்பின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது என்று ஜியோ நியூஸ் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது. 

மேலும், திருமண விருந்தினருக்கு ஒரே ஒரு வகை உணவு பரிமாற அனுமதி வழங்கப்படும் என்றும், இந்த புதிய கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த தடையைக் கடுமையாக அமல்படுத்த இஸ்லாமாபாத் காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மீறினால், தலைநகர் நிர்வாகத்தின் மூலம் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

செவ்வாயன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப் இதை அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT