முகப்பு
இந்தியா

அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 7,240 பேருக்கு பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று 5,233 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒருநாள் பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 32,498 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3,591 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4,26,40,301 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,24,723 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 15,43,748 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இதுவரை 194.59 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

முழு கட்டுரையைப் படிக்க →