இந்தியா

2 நாள் பயணமாக ஜம்மு வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்

DIN

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தன் மனைவி சவிதா கோவிந்துடன் இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை ஜம்மு வந்தடைந்தார். 

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தலைமைச் செயலாளர் ஏ.கே.மேத்தா, காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் நிர்வாகத்தினர் குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் வரவேற்றனர். 

ஜம்முவில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின்(ஐஐஎம்) ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். மேலும், 
நிறுவனத்தில் பன்முகத்தன்மைக் கலத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

பட்டமளிப்பு விழாவில் 77 பெண்கள் உள்பட 214 மாணவர்களுக்கு எம்பிஏ (முதுகலை வணிக நிர்வாகம்) பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்கின்றனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி மற்றும் தலித் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் (டிஐசிசிஐ) தலைவர் ரவி குமார் நர்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT