கரோனா திடீரென அதிகரிக்க என்ன காரணம்? நிபுணர்கள் சொல்லும் ரகசியம் 
இந்தியா

கரோனா திடீரென அதிகரிக்க என்ன காரணம்? நிபுணர்கள் சொல்லும் ரகசியம்

கோடை விடுமுறைக் கொண்டாட்டங்களுமே, தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கக் காரணங்கள் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

PTI


புது தில்லி : கரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காததும், கோடை விடுமுறைக் கொண்டாட்டங்களுமே, தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கக் காரணங்கள் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை புது தில்லியில் 622 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 2 பேர் கரோனாவுக்கு பலியாகினர். கரோனா உறுதி செய்யப்படும் விகிதமானது 3.17 சதவீதமாக உள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 1ஆம் தேதி தில்லியில் கரோனா பாதிப்பு 368 ஆகவும், கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 1.74 ஆகவும் இருந்தது. ஆனால் 10 நாள்களுக்குள், கரோனா பாதிப்பு 500 ஐத் தாண்டியுள்ளது. 

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், மக்கள் அனைவருமே, கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை.  அது மட்டுமல்லாமல், கோடை விடுமுறை என்பதால் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கோ, மாநிலத்துக்கோ சென்று விட்டு வருகிறார்கள். 

இதுபோன்றவையே கரோனா அதிகரிக்க முக்கிய காரணம். கரோனா பாதித்தவர்களும் காய்ச்சல், உடல் வலி என அவதிப்பட்டு 3 அல்லது 4 நாள்களில் குணமடைந்து விடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT