தில்லியில் காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்குமாறு தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.
தில்லியின் மாசுவில் 30 சதவீதம் மட்டுமே உள்நாட்டில் உருவாகிறது, மீதமுள்ளவை வெளியில் இருந்து வருகின்றன.
தில்லியில் வாகன மாசுபாடு பெரும் சவாலாக உள்ளது.
முன்னதாக மக்கள் பயன்பாட்டுக்கு சிஎன்ஜி அறிமுகப்படுத்தி இருந்தோம். தற்போது, எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கிச் செல்லும் முடிவை எடுத்துள்ளோம்.
அதேசமயம், நகரத்தில் உள்ள அனைத்து தொழில்துறை அலகுகளும் பிஎன்ஜிக்கு மாற்றப்பட்டுள்ளன.
அரசு தற்போது மரம் நடும் இயக்கத்தில் செயல்பட்டு வருகிறது. பசுமையை அதிகரிப்பதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். ஆனால் மத்திய அரசின் கூட்டு செயல் திட்டம் தேவை என்று அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.