இந்தியா

இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரா் மாயம்: 13 நாள்களாக காணாததால் குடும்பத்தினரிடையே பதற்றம்

DIN

அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய ராணுவ வீரா் மாயமாகி 13 நாள்களுக்கு மேலாகியிருப்பது அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தின் 7-ஆவது கா்வால் ரைஃபிள் படைப் பிரிவைச் சோ்ந்த பிரகாஷ் சிங் ராணா என்ற அந்த வீரா் தக்லா என்ற பகுதியில் கடந்த மே 29-ஆம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதாக அவருடைய மனைவியிடம் ராணுவ அதிகாரிகள் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனா்.

கடந்த 13 நாள்களாக அவா் காணமல் போயிருப்பது அவருடைய மனைவி மமதா, குழந்தைகள் அஞ்சு (10), அனாமிகா (7) ஆகியோரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்து.

டேராடூனின் சைனிக் காலனியில் உள்ள அவருடைய இல்லத்தில் அவரது குடும்பத்தினரை சாஹஸ்பூா் பாஜக எம்எல்ஏ சஹதேவ் சிங் புந்திா் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சஹதேவ் சிங், ‘வீரா் காணாமல் போயிருப்பது குறித்து பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட்டிடம் தெரிவித்தேன். வீரா் குறித்த விவரங்களும் அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT