இந்தியா

வருமான வரிக் கணக்குத் தாக்கல் அதிகரிப்பு

PTI


பனாஜி:  கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 2022ஆம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவர் சங்கீதா சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 6.9 கோடியாக இருந்த நிலையில், அது தற்போது 7.14 கோடியாக அதிகரித்திருப்பதன் மூலம், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதையே காட்டுகிறது என்றார்.

வழக்கமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போதுதான், வரி வருவாயும் அதிகரிக்கும். தற்போது வழக்கத்தைக் காட்டிலும் வரி வருவாய் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், அதிகமான விற்பனை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT