இந்தியா

அச்சுறுத்தும் கரோனா: நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 8,582 ஆக உயர்வு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,582 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,582 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று ஒரு நாள் தொற்று பாதிப்பு 8,329 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,582 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,32,22,017 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 44,513 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.10 சதவிகிதமாக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 4 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,761 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1,21 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 4,435 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,52,743 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 13,04,427 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1,95.07,08,541கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓமனுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர்!

சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை!

சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.07% ஆக உயர்வு!

Shakthi Thirumagan Movie review - ஊழலுக்கு எதிரான பராசக்தி... சக்தித் திருமகன் | Vijay Antony

SCROLL FOR NEXT