இந்தியா

தேர்தல் பேச்சுவார்த்தை: நட்டா, ராஜ்நாத்துக்கு பாஜக அதிகாரம்

DIN


குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பாஜக அதிகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக, பாஜக தேசியப் பொதுச்செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினர்கள் ஆகியோருடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதற்கானப் பணியை அவர்கள் விரைவில் தொடங்கவுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில், பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT