இந்தியா

நாட்டில் கரோனாவுக்கு சிக்கிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,995 ஆக உயர்வு

DIN

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,084 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 47,995 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று ஒரு நாள் தொற்று பாதிப்பு 8,582 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,084 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,32,30,101 ஆக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3.24 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 47,995 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.11 சதவிகிதமாக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 10 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,771 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1,21 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4,435 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,52,743 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 11,77,146 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1,95.19,81,150 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT