இந்தியா

'பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்' - கேரளத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

DIN

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பதவியை ராஜிநாமா செய்யக்கோரி காங்கிரஸ் இளைஞரணி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறியிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் இளைஞரணி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும் கண்ணூரில் உள்ள விருந்தினர் இல்லம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரை தண்ணீரை பீய்ச்சி அடித்து காவல்துறையினர் விரட்டினர். மேலும், அங்கிருந்து செல்ல மறுத்த பலரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கேரள தங்கக் கடத்தல் வழக்கு 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். துணை தூதரகத்துக்கு உள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்று சட்டவிரோதமாக மொத்தம் 23 முறை 167 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடா்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினா், அமலாக்கத் துறையினா், சுங்கத் துறையினா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு தொடா்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய 12 பேருக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தொடா்பாக, ஸ்வப்னா சுரேஷ், எா்ணாகுளத்தில் உள்ள நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், தங்கக் கடத்தலில் முதல்வா் பினராயி விஜயன், அவருடைய மனைவி, மகள் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடா்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT