இந்தியா

மூஸேவாலா கொலை வழக்கு: சந்தேக நபர் கைது

பின்னணி பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தோஷ் ஜாதவ் மற்றும் ஜாதவின் உதவியாளர் நவ்நாத் சூர்யவன்ஷி ஆகியோரை புணே போலீசார் கைது செய்தனர். 

DIN

பின்னணி பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தோஷ் ஜாதவ் மற்றும் ஜாதவின் உதவியாளர் நவ்நாத் சூர்யவன்ஷி ஆகியோரை புணே போலீசார் கைது செய்தனர். 

2021ஆம் ஆண்டு புணேவில் நடந்த கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான சந்தோஷ் ஜாதவ் பல மாதங்களாக தலைமறைவாக இருந்தார். 

இந்நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஜாதவ் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோர் ஞாயிறன்று குஜராத்தின் பூஜ் நகரிலிருந்த புணே கிராமப்புற காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த வாரம், புணே காவல்துறை ஜாதவின் உதவியாளர் சௌரப் மஹாகல் என்பவரை கைது செய்தது, அவர் மூஸேவாலா கொலையில் சந்தேகத்திற்கிடமானவர். பஞ்சாப்  மற்றும் மும்பை போலீசார் அவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

ஜாதவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்வதற்கு முன்பு புணே காவல்துறை கடந்த வாரம் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு பல குழுக்களை அனுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT