ஆனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை திறப்பு
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 6 மணிக்குத் திறக்கப்படுகிறது.
கேரளம்: கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 6 மணிக்குத் திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள் இன்று மாலை முதலே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு, நிலக்கல்லில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
வழக்கம் போல் இணையதள முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.