இந்தியா

ரயில்வேயில் புதிய சலுகைகளா?, தட்கல் விதிகளில் மாற்றமா? பரவும் தவறான தகவல்கள்

ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக இந்திய ரயில்வே புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்ததாகவும் சில விதிகளையும் மாற்றியுள்ளதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களிலும் எண்ம ஊடகங்களிலும் தவறான தகவல்கள் பரவுகின்றன

DIN

ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக இந்திய ரயில்வே புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்ததாகவும் சில விதிகளையும் மாற்றியுள்ளதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களிலும் எண்ம ஊடகங்களிலும் தவறான தகவல்கள் பரவிவருகின்றன.

அனைத்து விதமான வகுப்புகளிலும் மூத்த குடிமக்களான 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு பயணச்சீட்டு கட்டணத்திலிருந்து 40 சதவீதமும் 58 வயதைக் கடந்த பெண்களுக்கு 50 சதவீதமும் சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இவையனைத்தும் தவறான தகவல்கள் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தட்கல் விதிகளில் மாற்றம் பற்றி வெளியான தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இதுபற்றி முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT