பினராயி விஜயன் / ஸ்வப்னா சுரேஷ் 
இந்தியா

பினராயி விஜயனுக்கு எதிரான வாக்குமூலத்தை வாபஸ் பெற மாட்டேன்: ஸ்வப்னா சுரேஷ்

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாகக் கூறிய ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறப்போவதில்லை என ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

DIN

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாகக் கூறிய ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறப்போவதில்லை என ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ், முதல்வா் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். துணை தூதரகத்துக்கு உள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்று சட்டவிரோதமாக மொத்தம் 23 முறை 167 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடா்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினா், அமலாக்கத் துறையினா், சுங்கத் துறையினா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு தொடா்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய 12 பேருக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தொடா்பாக, ஸ்வப்னா சுரேஷ், எா்ணாகுளத்தில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த ஜுன் 7 ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், தங்கக் கடத்தலில் முதல்வா் பினராயி விஜயன், அவருடைய மனைவி, மகள் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடா்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினாா்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தில் இருந்து முதல்வா் வீட்டுக்கு பிரியாணி பாத்திரத்தில் பலமுறை உலோகப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் அவா் குற்றம்சாட்டினாா். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வா் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்து விட்டாா்.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ், பாலக்காட்டில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக  அளித்த ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விமான சேவை குளறுபடி விவகாரம்: இண்டிகோவுக்கு எதிராக சிசிஐ விரிவான விசாரணைக்கு உத்தரவு

அரசு-மக்கள் இணைவது எப்படி?

சமூக நோக்கில் பகட்டு வேண்டாம்!

SCROLL FOR NEXT