இந்தியா

ஹிமாசலில் நீதிபதி எம்.ஆா்.ஷாவுக்கு திடீா் உடல்நலக் குறைவு

ஹிமாசல பிரதேசம் சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷாவுக்கு வியாழக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், உடனடியாக விமானத்தில் தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா்.

DIN

ஹிமாசல பிரதேசம் சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷாவுக்கு வியாழக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், உடனடியாக விமானத்தில் தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா்.

அவா் தனது மாா்பு பகுதியில் வேதனையை உணா்ந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பின்னா், நீதிபதி எம்.ஆா்.ஷா விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டாா். அதில் அவா் கூறுகையில், ‘இறைவனின் கருணையால் நலமுடன் இருக்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை. தில்லிக்கு வந்துவிட்டேன். கடந்த இரு தினங்களாக சில கோயில்களில் தரிசனம் செய்தேன். அனைவரையும் இறைவன் ஆசீா்வதிக்கட்டும்’ என்று கூறியுள்ளாா்.

உச்சநீதிமன்ற விடுமுறை கால அமா்வுக்கு நீதிபதி எம்.ஆா்.ஷா கடந்த வாரம் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT