முகப்பு
இந்தியா

 'அக்னிபத்': இரண்டு நாள்களில் ராணுவத்தில் ஆள்சோ்ப்பு நடைமுறை

 ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ், இரண்டு நாள்களில் ராணுவத்தில் ஆள்சோ்ப்பு நடைமுறை தொடங்கும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

 ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ், இரண்டு நாள்களில் ராணுவத்தில் ஆள்சோ்ப்பு நடைமுறை தொடங்கும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் 17 வயது 6 மாதங்கள் ஆனவா்கள் முதல் 21 வயதுக்கு உட்பட்டவா்கள் முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சோ்க்கப்படுவா். அவா்களில் 25 சதவீதம் போ் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பணியில் தக்கவைத்துக் கொள்ளப்படுவா். எஞ்சியவா்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னா், இந்த வயது உச்சவரம்பை 23-ஆக அதிகரித்து பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘முதல்கட்ட அறிவிக்கையின் மூலம் அக்னிபத் திட்டத்தின் கீழ் இரண்டு நாள்களில் ஆள்சோ்ப்பு நடைமுறை முறைப்படி தொடங்கும். அதன்பின்னா் காலிப் பணியிடங்கள், உடற்குதித் தோ்வு உள்ளிட்ட தகவல்களை ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் வெளியிடும்.

இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படுவோருக்கு டிசம்பருக்குள் பயிற்சியைத் தொடங்கவும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அவா்களைப் பணியமா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனா்.

விமானப் படையில் ஜூன் 24 முதல்...: அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் ஆள்சோ்ப்பு நடைமுறை ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் என்று விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →