கோப்புப் படம் 
இந்தியா

ஜார்க்கண்ட்: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்ட கைதி சுட்டுக்கொலை

ஜார்க்கண்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கைதி அழைத்து வரப்பட்டபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

DIN

ஜார்க்கண்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கைதி அழைத்து வரப்பட்டபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிகார் மாநிலம், பிஹ்தாவிலிருந்து அமித் குமார் சிங் என்ற கைதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று ஜார்க்கண்ட் மாநிலம் அழைத்து வரப்பட்டார். தியோகர் மாவட்டத்தில் உள்ள சிவில் நீதிமன்ற வளாகம் அருகே கைதியை அழைத்து வந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கைதி அமித் குமாரை நோக்கி சரமாரியாக சுட்டனர். 

இதைத்தொடர்ந்து அவர்கள் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் கைதி அமித் குமார் மீது 3 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அமித் குமார் சடலத்தை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்ததாக தியோகர் காவல்துறை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர ஜாட் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT