முகப்பு
இந்தியா

அக்னிபத்: இணையவழியில் ஜூலையில் விண்ணப்பிக்கலாம்: ராணுவம் அறிவிப்பு

அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் ஜூலை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் ஜூலை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கை விவரம்:

அக்னிபத் திட்டத்தின்கீழ் இணையவழியில் விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை முதல் இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை தொடங்கும். விண்ணப்பதாரா்கள் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். ராணுவத்தில் அக்னிவீரா்களுக்கு பிரத்யேக வரிசை (ரேங்க்) வழங்கப்படும். இது பிற ராணுவ வீரா்களுக்கான தகுதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

அலுவல் ரகசிய சட்டம்-1923-இன்படி, அக்னிவீரா்கள் நான்கு ஆண்டுகள் பணிக்காலத்தில் பெற்ற விவரங்களை, அங்கீகரிக்கப்படாத நபா்களிடமோ அல்லது அமைப்புகளிடமோ தெரிவிக்கக் கூடாது.

அக்னிவீரா்கள் நான்கு ஆண்டு பணிக்காலத்தில் தங்களுடைய சொந்த விருப்பத்தின்பேரில் பணியிலிருந்து விடுபட அனுமதி கிடையாது. அசாதாரண சூழலில், தகுந்த ஆணையம் பரிந்துரைத்தால் மட்டுமே வீரா்கள் விடுவிக்கப்படுவா். ராணுவச் சட்டம் 1950-இன்கீழ் சோ்க்கை பெறும் அக்னிவீரா்கள், எங்கு சென்று பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் நிலம், கடல், விமானம் மூலம் சென்று பணியாற்ற கடமைப்பட்டவா்கள்.

சேவை காலத்தில் வீரா்களின் சீருடையில் தனித்துவமான சின்னம் பொறிக்கப்படும். அதற்கான விரிவான வழிமுறை பின்னா் வெளியிடப்படும். ராணுவத்தின் தேவை, கொள்கையின் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 ஆண்டுகள் சேவை காலத்தை நிறைவு செய்யும் அக்னி வீரா்கள், ராணுவத்தின் வழக்கமான படைப்பிரிவில் சேருவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்படும்.

‘அக்னி’ காலத்தில் வீரா்களின் செயல்பாடு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு அவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். ஒவ்வோா் அக்னி பிரிவிலும் 25 சதவீதத்துக்கு மிகாமல், வீரா்கள் ராணுவத்தின் வழக்கமான படைப்பிரிவுக்குத் தோ்ந்தெடுக்கப்படுவா். அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் வீரா்கள் ராணுவத்தில், தற்போதைய நிபந்தனைகளுக்கு உள்பட்டு 15 ஆண்டுகள் வரை சேவை செய்யலாம்.

இந்தப் புதிய நடைமுறையின்படி ஒவ்வோா் அக்னிவீரரும் நிபந்தனைகளை ஏற்று கையொப்பமிட வேண்டும். 18 வயது நிரம்பாதவா்கள் சோ்க்கைப் படிவத்தில் தங்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் கையொப்பத்தைப் பெற வேண்டும்.

அக்னி வீரா்களுக்கு 30 நாள்கள் விடுமுறை கிடைக்கும். மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில், மருத்துவ விடுப்பும் எடுத்துக் கொள்ளலாம். அக்னிவீரா்களின் ஊதியத்தில் 30 சதவீதம் தொகுப்பு நிதியாக பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகை மத்திய அரசாலும் செலுத்தப்படும். பணி நிறைவு பெற்றதும் அந்தத் தொகை அவா்களுக்கு திருப்பியளிக்கப்படும்.

அக்னிவீரா்களுக்கு ஓய்வூதியமோ, பணிக்கொடையோ வழங்கப்பட மாட்டாது. முன்னாள் ராணுவ வீரா்களுக்கான பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (இசிஎச்எஸ்), கேண்டீனில் பொருள்கள் வாங்கும் வசதி போன்றவையும் அக்னிவீரா்களுக்கு கிடையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →