தில்லியில் மீண்டும் கரோனா அச்சுறுத்தல்: ஜனவரிக்குப் பிறகு முதன்முறையாக..
தில்லியில் கடந்த ஜனவரிக்குப் பிறகு முதன்முறையாக இன்று (திங்கள்கிழமை) தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 10-ஐ தாண்டியுள்ளது.
தில்லியில் கடந்த ஜனவரிக்குப் பிறகு முதன்முறையாக இன்று (திங்கள்கிழமை) தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 10-ஐ தாண்டியுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,060 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் கடந்த ஜனவரி 26-ம் தேதி 10.59 சதவிகிதமாக இருந்தது. இதன்பிறகு, இன்று மீண்டும் 10 சதவிகிதத்தைத் தாண்டி 10.09 சதவிகிதமாக மாறியுள்ளது.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் புதிதாக 686 பேருக்கு கரோனா
அங்கு இதுவரை மொத்தம் 19,23,149 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,221 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 18,91,536 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 26,238 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 5,375 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4,095 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 14,533 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 856 பேர் முதல் தவணையாகவும், 2,334 பேர் இரண்டாவது தவணையாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 11,343 பேர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.