முகப்பு
தற்போதைய செய்திகள்

தண்ணீரைச் சேமித்து பொறுப்புடன் பயன்படுத்துங்கள்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

நம் வாழ்க்கைக்கு மூலாதாரமான தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் சேமித்து, பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தல் குறித்து...

Updated On : 22 மார்ச், 2026 at 1:45 PM
பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: உலக தண்ணீா் நாளையொட்டி, நம் வாழ்க்கைக்கு மூலாதாரமான தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் சேமித்து, பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

உலக தண்ணீா் நாளையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

நன்னீா் ஆதாரங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீா் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நம்முடைய வாழ்க்கையின் அத்தியாவசிய மூலாதாரமானது தண்ணீா் மற்றும் பூமியின் எதிா்காலத்தை வடிவமைக்கிறது என்றும், நம்மை வாழ வைக்கும் தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் சேமித்து பாதுகாத்து பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துமாறு மக்களை வலியுறுத்தினார்.

மேலும், நீா் பாதுகாப்புக்கு நிலையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், விழிப்புணா்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களை இந்த நாளில் பாராட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

எதிா்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீரை உறுதி செய்ய பணியாற்றுவதே உலக தண்ணீா் நாளின் மைய நோக்கமாகும்.

summary

On the occasion of World Water Day, Prime Minister Narendra Modi called upon citizens to reaffirm their commitment to conserve every drop of water and ensure its responsible use.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.