கோப்புப்படம் 
இந்தியா

அமலாக்கத் துறை முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நான்காவது முறையாக அமலாக்க இயக்குனரகம் முன்பு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று(திங்கள்கிழமை) ஆஜராகிறார்.

DIN

புது தில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நான்காவது முறையாக அமலாக்க இயக்குனரகம் முன்பு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று(திங்கள்கிழமை) ஆஜராகிறார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாள்களாக 30 மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அடுத்தகட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறையினா் அறிவுறுத்தினா்.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லியில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால், தனக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தாா்.

இதனை ஏற்று வரும் ஜூன் 20-ம் தேதி திங்கள்கிழமை அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT