இந்தியா

காபூலில் சாலையோரம் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி

DIN

மத்திய காபூலில் சாலையோரம் காரின் மீது குண்டு வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர். 

காபூலின் 15வது மாவட்டத்தில் உள்ள புல்-இ-க்வாஜா பாக்ராவுக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை காலிக் சத்ரான் தெரிவித்துள்ளார். 

வெடிகுண்டு வாகனத்தில் வெடித்ததால் உள்ளே அமர்ந்திருந்த 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவில் நிகழ்த்தப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்ததையடுத்து, 7 பேர் காயமடைந்தனர். 

குருத்வாரா தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம் ஞாயிறன்று பொறுப்பேற்றுள்ளது. மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அறிக்கையில், அபு முகமது அல் தாஜிகி என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. முகமது நபியை இந்திய அரசியல்வாதி ஒருவர் அவமதித்ததற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபரில் 15 முதல் 20 பயங்கரவாதிகள் காபூலின் கார்ட்-இ-பர்வான் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவிற்குள் நுழைந்து காவலர்களைக் கட்டிப்போட்டனர்.

மார்ச் 2020 இல், காபூலின் ஷார்ட் பஜார் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு ஹர் ராய் சாஹிப் குருத்வாராவில் தாக்குதல் நடைபெற்றது. இதில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT