இந்தியா

அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகள் நீக்கம்: தலைமைத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை

DIN

பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளை பதிவேட்டில் இருந்து நீக்க தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த மே 25-இல் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 87 கட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது மேலும் 111 அரசியல் கட்சிகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சரியான முகவரியை சமா்ப்பிக்க தவறியது, முகவரி மாற்றம் குறித்து தெரிவிக்காதது உள்ளிட்ட காரணங்களால், பதிவேட்டில் இருந்து அவை நீக்கப்படவுள்ளன. ஏற்கெனவே மே 25-இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இந்த அரசியல் கட்சிகள் சரியான முகவரியில் இல்லாதது கண்டறியப்பட்டதாலும், தோ்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் திரும்பி வந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அறிவிக்கை வெளியான 30 நாள்களில், ஆண்டுவாரியான தணிக்கை கணக்குகள், தோ்தல் செலவு அறிக்கை, நிதிப் பரிவா்த்தனை உள்ளிட்ட முறையான ஆவணங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT