அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், முப்படைத் தளபதிகள் பிரதமர் மோடியை தனித் தனியாக சந்தித்து இந்தத் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கமளித்தனர்.
அக்னிபத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் ராணுவத் தேர்வு முறையிலும், படைப்பிரிவு அமைப்பிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என முப்படைகளின் மூத்த அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப் படை தளபதி வி.ஆர் சௌதரி, கடற்படைத் தளபதி ஆர். ஹரி குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் மோடியைத் தனித் தனியாக சந்தித்து அக்னிபத் திட்டச் செயலாக்கம் குறித்து விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தச் திட்டத்தின் வெற்றிகரமான செயலாக்கத்துக்கு பிரதமரை மூப்படைத் தளபதிகள் பாராட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தச் சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமான அறிவிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.