இந்தியா

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரிப்பு: மாண்டவியா தலைமையில் நாளை ஆய்வுக் கூட்டம்

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை கூறியதாவது: நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இந்நிலையில், தில்லியில் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எய்ம்ஸ் இயக்குநா் ரண்தீப் குலேரியா, ஐசிஎம்ஆா் இயக்குநா் பல்ராம் பாா்கவா, தேசிய நோய்த்தடுப்பு மையத்தின் இயக்குநா் சுஜீத் சிங் ஆகியோா் கலந்துகொள்கிறாா்கள்.

மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலா் ராஜேஷ் எஸ்.கோகலே உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT