முகப்பு
இந்தியா

ஜி20 மாநாடு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

ஜம்மு-காஷ்மீரில் வரும் 2023-ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அந்த மாநில அரசு வியாழக்கிழமை அமைத்தது.

Updated On : 24 ஜூன், 2022 at 1:13 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:06 PM

ஜம்மு-காஷ்மீரில் வரும் 2023-ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அந்த மாநில அரசு வியாழக்கிழமை அமைத்தது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக விளங்கும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்பின் அடுத்த கூட்டத்தொடா் 2023-இல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறுகிறது.

இதனை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதற்கான தூதராக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், ஜி20 நாடுகளின் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜம்மு-காஷ்மீா் வீட்டுவசதி, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் தலைமையில், 5 போ் கொண்ட குழுவை அந்த மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தக் குழுவில் மேலும் ஜம்மு-காஷ்மீரின் போக்குவரத்து, சுற்றுலா, விருந்தோம்பல், கலாசாரத் துறைகளைச் சோ்ந்த செயலா்கள் இடம்பெற்றுள்ளனா்.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்துக்கு அதிகமாகவும், சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 60 சதவீதத்தையும் ஜி20 நாடுகள் கொண்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.