இந்தியா

50 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே?

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே முதலில் அமைச்சருடன் 10 எம்எல்ஏக்கள் 'காணாமல் போனதாக'க் கூறப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 42 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் அதில் 34 பேர் சிவசேனைக் கட்சியினர் என்றும் 8 பேர் சுயட்சை எம்எல்ஏக்கள் என்றும் தகவல் வெளியானது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, ஏக்நாத் ஷிண்டே எம்எல்ஏக்களுடன் இருக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஏக்நாத்தின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61 காசுகள் சரிந்து ரூ.88.19 ஆக நிறைவு!

ஸ்ரீநகரில்.. ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்!

செவ்வானம்... கனிகா!

இலங்கையில் மேலும் 2 முக்கிய அரசியல் தலைவர்கள் கைது!

உ.பி.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !

SCROLL FOR NEXT