இந்தியா

பிரிட்டனில் ஜெகன்னாதர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்த ஒடிசா முதல்வர்

DIN

பிரிட்டனில் ஜெகன்னாதர் கோயில் கட்டுவதற்கு தனது அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஐரோப்பாவில் வசிக்கும் மாநில மக்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உறுதியளித்தார். 

பட்நாயக் இத்தாலியில் உள்ள ரோம் பயணத்தின்போது ஒடியா புலம்பெயர்ந்தோருடன் உரையாடும் போது இதைத் தெரிவித்துள்ளார். 

12 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் ஒடியாக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வருடன் உரையாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த கூட்டத்தில் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், மிஷனரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். 

பட்நாயக்குடன் அவரது தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன் மற்றும் தில்லியில் உள்ள மாநிலக் குடியுரிமை ஆணையர் ரவிகாந்த் ஆகியோர் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

வெளிநாட்டில் குடியேறியவர்களை, மாநிலத்தின் வளர்ச்சியில் தனது அரசில் பங்குகொள்ளுமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

முதல்வர் பட்நாயக் இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 11 நாள் பயணத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT