இந்தியா

கரோனா தொற்றுநோயை நிர்வகிப்பதில் நாடு வெற்றி கண்டுள்ளது: மன்சுக் மாண்டவியா

DIN

கரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

ஜிப்மர் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் திறப்பு விழாவை அறிவித்த மாண்டவியா, அந்த நிறுவனத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பது ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிக்கிறது என்றார்.

உலகளாவிய பொது சுகாதார பிரச்னைகள் மற்றும் சவால்களைத் திறம்படக் கையாள்வதற்கு இந்த கல்வி நிறுவனம் உதவும். மேலும், இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்த நிறுவனம் நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, உலகம் முழுவதும் சேவை செய்யும் என்றார். 

இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநயாகர் செல்வம், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பூச்சியியல் பயிற்சிக்கான சர்வதேச சிறப்பு மையத்திற்கு சுகாதார அமைச்சர் அடிக்கல் நாட்டினார். 

அப்போது அவர் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியம். புதுவை மாநிலம் ஒரு ஆராய்ச்சி மையமாகத் திகழ்வதற்கு என் வாழ்த்துக்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT