இந்தியா

மும்பை கட்டட விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

DIN

முப்பையில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. 

மும்பையில் குர்லா அருகே நாயக் நகர் பகுதியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

கட்டட இடிபாடுகளில் 25க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்று தகவல் தெரிவித்தனர். இதில் இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்தில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு வாகனங்களும், நவீன கருவிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT