இந்தியா

உதய்பூர் படுகொலை: என்.ஐ.ஏ. விசாரணை நடத்த உத்தரவு!

DIN

உதய்பூரில் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தையல்காரர் கன்னையா லால். இவர் முகம்மது நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக நிர்வாகி நூபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, கன்னையா லால் நேற்று(செவ்வாய்க்கிழமை) கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டாா். மேலும் இந்த கொலையை விடியோவாகப்  பதிவிட்டு, இஸ்லாத்தை அவமதித்த காரணத்தால் கன்னையா லாலை பழிதீா்த்தாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பிரதமா் மோடிக்கும், பாஜகவிலிருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுா் சா்மாவுக்கும் அவா்கள் மிரட்டல் விடுத்தனா். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதய்பூரில் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் விசாரணை நடத்துவதுடன் இந்த கொலையில் தீவிரவாத அமைப்புகள், வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT