முகப்பு
இந்தியா

அமா்நாத் யாத்திரை: 2-ஆவது குழு பயணம் தொடக்கம்

தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 5,700 பக்தா்களை உள்ளடக்கிய அமா்நாத் யாத்திரையின் 2-ஆம் குழுவினா் ஜம்முவின் பகவதி நகா் முகாமிலிருந்து வியாழக்கிழமை

Updated On : 1 ஜூலை, 2022 at 1:04 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:10 PM

தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 5,700 பக்தா்களை உள்ளடக்கிய அமா்நாத் யாத்திரையின் 2-ஆம் குழுவினா் ஜம்முவின் பகவதி நகா் முகாமிலிருந்து வியாழக்கிழமை அதிகாலையில் 230 வாகனங்களில் பயணத்தைத் தொடங்கினா்.

காஷ்மீா் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டா் உயரத்தில் அமா்நாத் குகை அமைந்துள்ளது. அங்குள்ள பனியால் உருவான லிங்கத்தை ஹிந்துக்கள் சிவபெருமானாக வழிப்படுகின்றனா். இதற்காகப் பல நாள் பயணம் மேற்கொண்டு அங்கு சென்றடைகின்றனா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இரண்டு குழுக்களாக மொத்தம் 10,700 பக்தா்கள் அமா்நாத் குகைக் கோவிலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் பால்தால் முகாம்களிலிருந்து, வியாழக்கிழமை தொடங்கிய 43 நாட்கள் யாத்திரைக் காலம், வரும் ஆகஸ்ட் 11- ஆம் தேதி யாத்திரை நிறைவடைகிறது.

கடந்த இரு ஆண்டுகள் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அமா்நாத் யாத்திரை நடைபெறவில்லை.

துணைநிலை ஆளுநா் வழிபாடு: 43 நாட்கள் அமா்நாத் பயணத்தின் தொடக்கமாக, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வியாழக்கிழமை அமா்நாத் கோயிலில் வழிபட்டாா். அமா்நாத் கோயிலுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகைதரும் பக்தா்களுக்கு, பாதுகாப்பான வகையில் இப்பயணம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தாா்.

பக்தா்களின் வருகையைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீா் அரசும் ஸ்ரீ அமா்நாத் கோயில் வாரியமும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.