முகப்பு
இந்தியா

உக்ரைனிலிருந்து 7 விமானங்கள் நாளை(மார்ச் 2) தில்லி வருகை

உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்கும் மேலும் 7 விமானங்கள் புதன்கிழமை தில்லி வரவுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்கும் மேலும் 7 விமானங்கள் புதன்கிழமை தில்லி வரவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைன் நாட்டிலுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன்மூலம், ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ நிறுவனங்களின் 9 விமானங்களில் உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்கள் உள்ளிட்டவர்களை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து, இந்திய ராணுவ விமானங்களை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்து வரும் சூழலில், நாளை உக்ரைன் அண்டை நாடுகளிலிருந்து மேலும் 7 விமானங்களில் இந்தியர்கள் தில்லி வரவுள்ளனர்.

இதற்கிடையே உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியப் படைகள் இன்று நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் பலியானது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →