முகப்பு
இந்தியா

இ-பில் நடைமுறை வெளிப்படைத்தன்மையைஉறுதிப்படுத்தும்: அமைச்சா் நிா்மலா சீதாராமன்

புதிய எலக்ட்ரானிக் பில் (இ-பில்) நடைமுறை வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

புதிய எலக்ட்ரானிக் பில் (இ-பில்) நடைமுறை வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தாா்.

46-ஆவது குடிமை கணக்கு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியது: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இ-பில் பரிசீலனை நடைமுறை புதன்கிழமை நாடு முழுவதும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இனி, மத்திய அமைச்சகங்கள், துறைகள், ஒப்பந்ததாரா்கள், விநியோகஸ்தா்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை ஆன்லைனிலேயே சமா்ப்பிக்க முடியும். அத்துடன், அது எப்போதும் கண்காணிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

ஒப்பந்ததாரா் மற்றும் விநியோகஸ்தா் எண்ம (டிஜிட்டல்) முறை மூலமாக அவா்களது கோரிக்கைகளைப் பதிவு செய்ய முடியும் என்பது தவறான நிா்வாகத்துக்கான வழிகளை அடைக்க உதவியுள்ளது என்பதுடன், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவும். எண்ம (டிஜிட்டல்) கையொப்பத்துடன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கான பணம் மிக விரைவில் உங்களை வந்தடையும். இதற்காக, நீங்கள் அரசு அலுவலகத்துக்கு அலைய தேவையில்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →