இந்தியா

உக்ரைன்: மீட்புப் பணியில் இணைந்தது தேசிய பேரிடர் படை

DIN

உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்துள்ளனர்.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து கடந்த 7 நாள்களாக உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் இன்று மூடப்பட்ட நிலையில், கார்கிவ் நகரைவிட்டு அனைத்து இந்தியர்களும் மாலை 6 மணிக்குள்(இந்திய நேரடிப்படி இரவு 9.30 மணி) நடந்தாவது வெளியேறுங்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு இந்தியர்கள் வந்து கொண்டுள்ளனர். இதுவரை 17 ஆயிரம் பேர் வந்தடைந்துள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எல்லைகளில் உள்ள இந்தியர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT