உக்ரைனிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் மாணவர்களுக்கு இலவச பயணத்தை வழங்க உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது என உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவ்னிஷ் அவஸ்தி கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
உக்ரைனில் இருந்து திரும்பும் அனைத்து மாணவர்களும் தில்லி விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாகவும், இலவசமாகவும் அவரவர் வீடுகளுக்குச் செல்ல, முழு பயண செலவையும் உ.பி. அரசே ஏற்கும்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக இந்திய அரசு வெளியேற்றி வருகிறது.
உள்துறை மற்றும் உ.பி.யின் பிற துறைகளுக்கு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.