மருத்துவக் கல்விக்கு அதிகக் கட்டணம்: நிதிஷ் குமார் கவலை 
இந்தியா

மருத்துவக் கல்விக்கு அதிகக் கட்டணம்: நிதிஷ் குமார் கவலை

நாட்டில் மருத்துவக் கல்விக்கு மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்திருக்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார்

IANS


பாட்னா: நாட்டில் மருத்துவக் கல்விக்கு மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்திருக்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், உக்ரைன் நாட்டுக்கு இந்த அளவுக்கு மாணவர்கள் மருத்துவம் பயிலச் செல்கிறார்கள் என்பதே எனக்குத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

நமது நாட்டில், மாணவர்கள், மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், உக்ரைனில் அதுபோன்ற எந்தத் தேர்வும் கிடையாது. இந்த விவகாரமே, ரஷியா - உக்ரைன் போரால்தான் தெரிய வந்திருக்கிறது என்றார்.

மேலும், உக்ரைனில் மருத்துவக் கல்விக்கான கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு வேளை இது உண்மையாக இருக்குமானால், நம் நாட்டில் இது தொடர்பான ஆலோசனை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

சில  தனியார் கல்லூரிகள் மருத்துவக் கல்விக்கு ரூ.1 கோடி வரை கட்டணம் வசூலிக்கின்றன என்றும் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT