இந்தியா

உ.பி.யில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.33 சதவீத வாக்குகள் பதிவு

DIN

உத்தரப் பிரதேசத்தில் 6-ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில்,  பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்டங்களாக 292 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

அதன்படி, பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அம்பேத்கர்நகரில் அதிகபட்சமாக 40.60 சதவீதமும், குஷிநகரில் 39.36 சதவீதமும், பஸ்தியில் 37.48 சதவீதமும் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் 36.63 வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகக் குறைந்த வாக்குப்பதிவாக பல்ராம்பூரில் 29.89 சதவீதமும், சந்த் கபீர் நகரில் 34.42 சதவீதமும் பதிவாகியுள்ளது.

ஏழாவது கட்ட வாக்குப்பதிவு, மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT