முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 179 கோடியை நெருங்கியது

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 179 கோடியை நெருங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
கரோனா தடுப்பூசி
பகிர்:

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 179 கோடியை நெருங்கியது.

கடந்த 24 மணி நேரத்தில் 24.62 லட்சத்துக்கும் அதிகமாக (24,62,562) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 178.55 கோடியைக்

(1,78,55,66,940) கடந்தது. 2,06,52,074 அமா்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,651 போ் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 4,23,78,721 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,921 போ் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 63,878 ஆக உள்ளது; நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவா்களின் மொத்த விகிதம் தற்போது 0.15 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.