பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே முற்றிய பிரச்னை; ஒருவருக்கொருவர் சுட்டுக் கொன்றதில் 5 பேர் பலி
சக ராணுவ வீரர்களை சுட்ட கான்ஸ்டபிள் சட்டப்பா, சம்பவ இடத்திலேயே சுட்டு கொல்லப்பட்டார்.
பஞ்சாப் அமிர்தசரஸில் பாதுகாப்புப் படை வீரர்களில் ஒருவர் சக ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய கான்ஸ்டபிள் சட்டப்பாவை மற்ற வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில், சட்டப்பா உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிக்க | மொஹாலி டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா அற்புத சதம் 175; இந்தியா 574/8 டிக்ளோ், இலங்கை 108/4
இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லையான அட்டாரி வாகா பகுதியிலிருந்து 20 கிமீ தூரத்தில் அமைந்துள்ள காசாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எல்லை பாதுகாப்பு படையின் மூத்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.