இந்தியா

சுமியில் இருந்து போல்டாவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 694 இந்திய மாணவர்கள்

DIN

உக்ரைனிய நகரமான சுமியில் இருந்து 694 இந்திய மாணவர்கள் போல்டாவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

போர் பதற்றத்தினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிய நகரமான சுமியில் சுமார் 700 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை வெறியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், 

ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனில் உள்ள சுமி நகரிலிருந்து இந்திய மாணவர்களை வெளியேற்றுவது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் மற்றும் உக்ரைன் தலைவர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கியுடன் கடந்த திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். 

இதையடுத்து, சுமி நகரில் 694 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பேருந்து மூலம் போல்டாவா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

உக்ரைனிலிருந்து இதுவரை 17,100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். இந்தியர்கள் சிக்கியுள்ள சுமி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT