இந்தியா

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

DIN

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தேடுதல் ஜாம்பவானான கூகுள் தளம் இன்று சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பு டூடுலுடன் கொண்டாடுகிறது. பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதைக் குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது. 

மேலும், சிறப்பு அனிமேஷன் விடியோவில் பெண்கள் சமூகத்தில் அவர்களின் பல்வேறு பங்களிப்பை விவரிக்கும் வகையில் உள்ளது. மகளிர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி, அதன் முக்கியத்துவம் ஆகியவை அதில் விளக்கப்பட்டுள்ளது. 

வீட்டிலிருந்து பணிபுரியும் தாய் முதல் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் வரை தனது திறமைகளை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கும் வகையில் இன்றைய டூடுலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு விளக்கப்படமும், பெண்கள் தனக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும், தங்கள் சமூகத்திற்காகவும் எப்படிப் பாடுபடுகிறாள் என்ற பொதுவான கருத்தைத் தெரிவிக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூகுள் தனது டூடுல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT