முகப்பு
இந்தியா

சூரத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் 600 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, இது தொடர்பாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் 600 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, இது தொடர்பாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். 

இங்குள்ள ஓல்பாட் தாலுகாவின் சயான் நகரில் உள்ள ஜவுளி பூங்கா அருகே மகாராஷ்டிரத்தின் நம்பர் பிளேட் கொண்ட வாகனத்திலிருந்து கடத்தல் பொருட்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டதாக சூரத் கிராமப்புற சிறப்புச் செயல்பாட்டுக் குழுவின் அதிகாரி தெரிவித்தார்.

ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், சிறப்புச் செயல்பாட்டுக் குழு நடவடிக்கையை மேற்கொண்டது. ரூ.60,01,500 மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நான்கு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜாவேத் ஷேக், அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக்கில் இருந்து கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் போதைப்பொருள் விநியோகம் செய்பவர் உள்பட மேலும் 6 பேர் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களில் மூன்று பேர் கஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் ஒடிசாவில் உள்ள அங்குலைச் சேர்ந்தவர் என்று அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.